மாணவர்களே..!! உங்களுக்குக்கும் 100% உதவித்தொகை..!! சென்னை ஐஐடி வெளியிட்ட வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி கூட்டாளர்களும், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை உள்ள பி டெக் மாணவர்களுக்கு 100 சதவித நிதியுதவி இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் மாணவர்களுக்காக அழைத்து வரும் நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை ஆதரவுகளில் மெரிட் கம் மீன்ஸ் உதவித்தொகையும் ஒன்று.

எஸ்சி/எஸ்டி மாணவர்கள் எந்த பாடப்பிரிவில் சேர்ந்தாலும் அவர்களின் பெற்றோரின் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கி வரும் மூன்றில் ஒரு பங்கு கல்வி கட்டண தள்ளுபடி எம்.சி.எம் கல்வி உதவித் தொகையும் சேர்த்து வழங்கப்படுவதால், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த தகுதியுள்ள பி டெக் மற்றும் இரட்டைப் பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு பெறுவர். பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் முழு கல்வி கட்டணம் விலக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser6

Next Post

"இருக்கு, ஆனா இல்ல".! தலைக்கவசத்தை பொதுமக்களுக்கு கொடுத்து பிடிங்கிய சம்பவம்.! கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் அதிர்ச்சி.!

Fri Feb 9 , 2024
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிதல் விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட ஆட்சியர் சரயு, பொதுமக்களுக்கு அணிவித்த தலைக்கவசங்களை, சிறிது நேரத்தில் அரசு ஊழியர்கள் திரும்பப்பெற்றுச் சென்றனர். இந்த சம்பவம் காண்போரை முகம் சுழிக்க வைத்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே மாதம் 2023இல் எடுத்த கணக்கெடுப்பின்படி, 279 சாலை விபத்துகளில், 307 பேர் இறந்துள்ளதாகவும், 757 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வந்த நிலையில், அம்மாவட்டத்தின் […]

You May Like