தொலைதூர ஆன்லைன் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..! அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர ஆன்லைன் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன. பொது மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, விற்பனை மேலாண்மை உட்பட 8 பாடப்பிரிவுகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ. படிப்பில் நடப்பு ஆண்டில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ‘டான்செட்’ அல்லது தொலைதூரக் கல்வி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CUIC | Anna University

எம்.சி.ஏ. படிப்புக்கு பி.சி.ஏ. பட்டதாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் அவசியம். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 45 சதவீத மதிப்பெண் போதும். மேலே குறிப்பிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர 12ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், தொலைதூரக் கல்வியில் MBA, MCA, M.Sc., ( CS ) ஆகிய படிப்புகளில் சேர https://cde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைனில் MBA பயில https://onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

சசிகலாவுடன் மீண்டும் இணைகிறார் திவாகரன்..! தஞ்சையில் அதிமுக-அ.தி.க. இணைப்பு நிகழ்ச்சி..!

Sun Jul 10 , 2022
தனிக்கட்சி ஆரம்பித்த சசிகலா சகோதரர் திவாகரன் மீண்டும் தன் சகோதரியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் பொருட்டு, அவரது அணித் தரப்பில் நாளை பொதுக்குழு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஓபிஎஸ் அணி அவர்களை எதிர்த்து தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு […]
சசிகலாவுடன் மீண்டும் இணைகிறார் திவாகரன்..! தஞ்சையில் அதிமுக-அ.தி.க. இணைப்பு நிகழ்ச்சி..!

You May Like