மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமின்றி ஆன்லைன் கற்றலை தொடங்கலாம்… மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி…

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில், ஆன்லைனில் கட்டணமின்றி கற்றலை தொடங்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

online learning classes

கொரோனா தொற்றால் ஊரடங்கு நீட்டித்ததையடுத்து, மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ஆன் லைனில் கற்றல் மற்றும் கற்பித்தலைத் தொடருமாறு கல்லூரி, பல்கலைக்கழகங்களை யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகள் அறிவுறுத்தி வந்த நிலையில், மாணவா்கள் தாங்களே ஆன் லைனில் கற்றலைத் தொடரும் வகையில், விடியோ விரிவுரைகள், டிஜிட்டல் புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும் சில வலைதளங்களை கட்டணம் எதுவும் இன்றி பயன்படுத்திக் கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு மீண்டும் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் அமைப்புகள், உயா் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆன்லைன் கற்றல், கற்பித்தலை வழங்கும் 41 வலைதளங்களின் விவரங்களை ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) வெளியிட்டுள்ளது.

இந்த வலைதளங்களில் பள்ளி ஆரம்பக் கல்வி முதல் அனைத்துத் துறை சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகள் வரையிலான டிஜிட்டல் பாட புத்தகங்கள், விடியோ வகுப்புகள், பாட கலந்துரையாடல் விடியோக்கள் எனப் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே படித்தும், பார்த்தும் பயன்பெற முடியும். அவை என்னென்ன வலைதளங்கள் என்று பார்க்கலாம்….

*தேசிய டிஜிட்டல் நூலகம் என்ற வலைதளத்தில் ஆரம்பக் கல்வி முதல் முதுநிலை படிப்புகள் வரையிலான பாடங்கள் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

*மத்திய அரசின் ஸ்வயம் வலைதளத்தில் 9-ஆம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரையிலான பாட கலந்துரையாடல் நிகழ்வுகள், விடியோ விரிவுரைகள், பாட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

*தேசிய அறிவுசார் வலைதளம், உயா் அலைவரிசை வசதியுடன் அனைத்து வகையான ஆராய்ச்சி, ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்த தகவல்களைப் பெறும் வசதியைத் தருகிறது.

*தொழில்நுட்பம் மூலமான கற்றலுக்கான தேசிய திட்ட வலைதளம் மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி, கான்பூா் ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி, ரூா்கி ஐஐடி ஆகிய ஐஐடிக்கள் மூலம் 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவா்கள் அவா்கள் துறை சார்ந்த திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள வசதியாக, இந்த வலைதளம் மூலம் பொறியியல், கலை-அறிவியல் துறைகள் சார்ந்த 600-க்கும் அதிகமான ஆன்-லைன் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மேலும், இதுபோல பல வலைதளங்கள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே கற்றலைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

கேரளாவில் இரவில் வீட்டின் கதவை தட்டும் உருவம் யார்?... மின்னல் வேகத்தில் வருவது ஆவியா!...

Wed Apr 15 , 2020
கொரோனா அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் இந்த நேரத்தில், கேரளாவின் திருச்சூரில் இரவில் ஆறடி உயரத்திற்கு ஒரு உருவம் மின்னல் வேகத்தில் சென்று வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கின் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கேரளாவில் ஊரடங்கு உத்தரவை மீறாமல் அனைவரும் எங்கும் செல்லாமல் அவர்களுக்கான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், கேரளாவில்தான் முதன்முதலாக தொற்று கண்டறியப்பட்டு, கொரோனாவுக்கு இருவர் பலியாகியுள்ளனர். […]
kerala ghost fear

You May Like