மாணவர்களே இன்று முதல் ஆரம்பம்..!! வெளிநாடுகளுக்கு சுற்றுலா..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம், சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 13ஆம் தேதியான இன்று முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, மாநில போட்டிகளில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் விதமாக எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் போட்டிகளை நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chella

Next Post

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! B.E டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Mon Feb 13 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த HMI development Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். […]

You May Like