காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா?

வாக்கி டாக்கியை தொலைத்துவிட்டு என்ஜீனியர் மீது திருட்டு பழி சுமத்திய சப் இன்ஸ்பெக்டர்… பணி இடமாற்றம்…

விருதுநகர் அருகே வாக்கி டாக்கியை கவனக்குறைவால் தொலைத்துவிட்டு, காவல் நிலையத்திற்கு வந்த என்ஜீனியர் மீது திருட்டு பழி சுமத்தி அடித்து உதைத்ததால் சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

vakki takki

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அடுத்த சாலைமறைக்குளத்தை சேர்ந்தவர் தனசேகர் மகன் தவக்கண்ணன். இவர் தனது டிப்ளமோ என்ஜினீயர் படிப்பை முடித்துவிட்டு, வெளி நாட்டில் வேலை செய்வதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.

பாஸ்போர்ட் சரிபார்த்தல் விசாரணைக்காக அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு கடந்த 21 ந்தேதி தவக்கண்ணன் தனது உறவினர்களுடன் காவல் நிலையம் சென்றனர். விசாரணை முடிந்து வீடு திரும்பிய நிலையில், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் என்பவர், தனது வாக்கிடாக்கியை காணவில்லை என்றும், பாஸ்போர்ட் சரிபார்க்க வந்த தவக்கண்ணன் திருடி சென்றிருக்கலாம் என்று நினைத்து, சிசிடிவி யில் பதிவாகாததை பதிவானதாக கூறி உதவி ஆய்வாளர் மணிகண்டன் தவக்கண்ணனின் வீடு தேடி சென்று அடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும், வாக்கி டாக்கி கிடைத்து விட்டதாக தகவல் வந்தும், தவக்கண்ணனை விடாமல், வாக்கி டாக்கியை திருடியதாக ஒப்புகொள்ளவேண்டும் என்று உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் அங்கு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, காவலர்கள் தங்கபாண்டியன் ,காமராஜ், அழகுமலை,சரவணன், செல்வராஜ், ஏட்டு பெரியசாமி ஆகியோர் அவரை அடித்து உதைத்துள்ளனர்.

வாக்கி டாக்கியை திருடியதாக கூறி அடித்து தவக்கண்ணன் பலத்தகாயம் அடைந்ததால், உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசாரை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து பலத்த காயம் அடைந்த தவக்கண்ணன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இது குறித்த விசாரணையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவே இல்லை என்பதும், உதவி ஆய்வாளர் மணிகண்டன் கவனக்குறைவால் வாக்கி டாக்கியை தவற விட்டு, அதனை மறைக்க தவக்கண்ணன் மீது பழியை போட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டனிடம் விசாரணை நடத்துயதில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரை வீரசோழன் காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், பொய்யான திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன் தவக்கண்ணன் காப்பாற்றப்பட்டுள்ளார். போலீசாரின் தாக்குதலுக்குள்ளாகி எழுந்து நடக்க முடியாமல் கிடப்பதை கண்டு தவக்கண்ணன்-ன் தந்தை கண்ணீர்விட்டு கதறினார்.

1newsnationuser2

Next Post

மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

Tue Mar 24 , 2020
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதன் காரணமாக மருத்துவமனைகளிலும் பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து […]
1 1

You May Like