அடுத்தடுத்த அதிர்ச்சி.. சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை.. மற்றொரு மாணவர் மருத்துவமனையில் அனுமதி..

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களே தற்கொலை செய்து கொள்வதை பார்க்க முடிகிறது.. இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஸ்ரீவான் சன்னி என்ற மாணவர் சென்னை ஐஐடியில், முதுநிலை ஆராய்ச்சி படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.. சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படித்து வந்த அவர், இன்று தற்கொலை செய்து கொண்டார்.. மன உளைச்சல் காரணமாகவு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது..

இதே போல் மற்றொரு ஐஐடி மாணவரும், அதிக அளவிலான தூக்க மாத்திரையை எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்த சம்பவங்கள் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.. எனினும் மாணவர் இறப்புக்கான காரணம் குறித்தும், தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.. இதுகுறித்து ஐஐடி நிர்வாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Maha

Next Post

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது…..? ஆளும் கட்சியை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்…..!

Tue Feb 14 , 2023
அரசியலில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சனம் செய்வதும் சகஜமான விஷயம்தான். ஆனால் இருவரும் மாறி மாறி தங்களை விமர்சனம் செய்து கொள்வதில் எந்தவித பயனும் கிடையாது. யார் மீது யார் விமர்சனம் வைத்தாலும் தங்கள் மீது தவறு இருந்தால் அதனை நிச்சயமாக திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும், அப்போதுதான் அது ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியும். ஆனால் அந்த செயலை இதுவரையில் யாரும் செய்தது […]

You May Like