திடீர் உடல்நலக்குறைவு..!! மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி..!! வெளியான பரபரப்பு அறிக்கை..!!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் மாநில முதலமைச்சருமான சரத் பவாருக்கு இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சரத் பவாரை தொடர்பு கொண்டு அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வருகிற நவம்பர் 2ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு..!! மூத்த தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி..!! வெளியான பரபரப்பு அறிக்கை..!!

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் ஷீரடியில் நடைபெறும் கட்சியின் முகாம்களில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 81 வயதாகும் சரத்பாவருக்கு கடந்த ஆண்டு பித்தப்பை பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்டு , 15 நாட்கள் தொடர் மருத்துவமனை கண்காணிப்பிற்கு பிறகு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஸ்வாதி கொலை வழக்கில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவு… ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் தர உத்தரவு…

Mon Oct 31 , 2022
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் ஸ்வாதி ரயிலுக்காக காத்திருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர் ஸ்வாதியை அரிவளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பித்து ஓடினான். இந்த வழக்கில் கொலையாளியை பல நாட்கள் தேடி வந்த நிலையில் தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் ராம்குமார்தான் ஸ்வாதியை கொலை செய்தார் என […]

You May Like