டிகிரி முடித்திருந்தால் போதும்..! வங்கியில் வேலை வாய்ப்பு..! துர்கா பூஜையில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண் எம்.பி…இணையத்தில் கடுமையாக தாக்கும் இஸ்லாமியர்கள்! அடிக்கடி சண்டை போட்டு அம்மா வீட்டிற்கு செல்லும் மனைவி..! மனைவி இல்லாத நேரத்தில் மகளுடன்…! லாக்கப்பில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்த தலைமைக் காவலர்..! சிறுமியை கதறவிட்டு கற்பமாக்கியதால் வந்த வினை..! தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்..

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை..! என் சாவுக்கு காரணம் இந்த 7 பேர் தான்..!

மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது.


தேனி மாவட்டம் சின்னமனூர் கே.கே.குளம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கோபிநாத். டிப்ளமோ படித்த இவர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இவருக்கும் இவரது உறவினர் ஜெயப்பிரியாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு கோபிநாத் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு வேலை நிமித்தம் காரணமாக சென்று விட்டார். மனைவி ஜெயப்பிரியா, கம்பம் அருகே சுருளிப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை..! என் சாவுக்கு காரணம் இந்த 7 பேர் தான்..!

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து கோபிநாத் சொந்த ஊருக்கு வந்தார். இதனையடுத்து தனது மனைவியை அழைப்பதற்காக சுருளிப்பட்டிக்கு அவர் சென்றுள்ளார். ஆனால் அவருடன் வருவதற்கு ஜெயப்பிரியா மறுத்து விட்டார். மேலும் ஜெயப்பிரியா, அவருடைய தந்தை பிரேம்குமார், தாயார் விமலா, அண்ணன் நிஜந்தன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கோபிநாத்தை திட்டியுள்ளனர். இதனையடுத்து அவர் தனது வீட்டுக்கு வந்து விட்டார். வெளிநாட்டுக்கு பணம் சம்பாதிக்க சென்றது குற்றமா என உறவினர்களிடம் நொந்து போய் பேசியுள்ளார்.

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை..! என் சாவுக்கு காரணம் இந்த 7 பேர் தான்..!

மனைவி மற்றும் உறவினர்கள் திட்டியதால் மனம் உடைந்த கோபிநாத் இரவு தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், காலை நீண்ட நேரமாகியும் அவர் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று அவருடைய தந்தை பார்த்தார்.

உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை..! என் சாவுக்கு காரணம் இந்த 7 பேர் தான்..!

அப்போது அறையின் மின்விசிறியில் கோபிநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார், கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கோபிநாத் தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர், தனது கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், “நான், கோபி எழுதி கொள்கிறேன். எனக்கு வாழ விருப்பம் இல்லாததால் நான் உயிரை மாய்த்து கொள்கிறேன். நான் இதை செய்யாவிட்டால், என்னுடைய குடும்பத்தினர் என்னை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு இறந்து விடுவார்கள். அதனால் என் முடிவை, நானே தேடி கொள்கிறேன்.

எனது அம்மா, அப்பாவுக்கு நான் ஒரு மகனாய், என்னுடைய தம்பிக்கு அண்ணனாய் என்ன செய்ய வேண்டுமோ? அதனை செய்து விட்டேன். இனிமேல் என்னுடைய அம்மா, அப்பாவை பார்த்து கொள்ள தம்பி இருக்கிறான். என் சாவுக்கு 7 பேர் காரணம். உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும். என் சாவுக்கு பிறகு, இந்த மாதிரியான முடிவை இனிமேல் யாரும் எடுக்க வேண்டாம். அதனால் தான், நான் இந்த முடிவை எடுத்து கொள்கிறேன். என் சாவுக்கு காரணமான ஜெயப்பிரியா (மனைவி), பிரேம்குமார் (மாமனார்), கமலா (மாமியார்), நிஜந்தன் (மைத்துனர்), ஜெயப்பிரியாவின் உறவினர்கள் விமலா, வாசியம்மாள், நர்மதா ஆகியோருக்கு உண்மையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கோபிநாத்தின் தந்தை பாலசுப்பிரமணி, சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது, கோபிநாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஜெயப்பிரியா, விமலா (45), நிஜந்தன் (25), கமலா (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை செய்த கோபிநாத்திடம், அவருடைய சம்பள பணம் கேட்டு மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொல்லை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட, சவுதி அரேபியாவில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அவர் தூக்குப்போட பயன்படுத்திய ஆணி பிடுங்கியதால் அவர் உயிர் தப்பிய கூறப்படுகிறது. மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுத்த தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் சின்னமனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser4

Next Post

வெளிநாட்டில் உயிருக்கு போராடும் கணவர்..! கணவரை மீட்க போராடும் மனைவி..!

Sat Oct 17 , 2020
வளைகுடா நாட்டில் சிக்கித் தவிக்கும் தன் கணவரை மீட்க கோரி சிவகங்கை பெண் ஒருவர் போராடி வருகிறார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெரியகோட்டை பகுதியை சேர்ந்த தம்பதி அழகர்சாமி – தமிழ் பாண்டி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. வறட்சியான நிலம் என்பதால் விவசாயமும் செய்ய முடியாமல், வேறு வேலையும் கிடைக்காத காரணத்தால் அழகர்சாமி வட்டிக்கு பணம் வாங்கி கொண்டு கடந்த 2017 ஆண்டு […]
123 4

You May Like