கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்…

குழந்தைகள் கற்க பயனுள்ள இணையதளங்கள், ஆப்ஸ்…

இந்த நூற்றாண்டை ஆக்கிரமித்த பெரிய விஷயம் என்றால் அது நிச்சயம் இணையம்தான். அதன் தயாரிப்புகளான செல்பேசி, கணிப்பொறி, மடிக்கணினி முதலிய எலக்ட்ரானிக் சாதனங்கள் வழியாக நம்மையும் நம் குழந்தைகளையும் இணையமே ஆள்கிறது.


இணையம் என்றாலே பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், வாட்ஸ் அப், வீடியோ கேம்ஸ் என்று குழந்தைகள் சுருங்கிவிடக்கூடாது. இந்த கோடை விடுமுறையில் அவர்களுக்குத் தேவையான பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தரக்கூடிய சூப்பரான ஆப்ஸ், இணையதளங்களை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் தேடலும் இதுதான் என்றால் தொடர்ந்து படியுங்கள்…

Math Play ground

www.mathplayground.com

கணிதத்தை விளையாட்டாகச் சொல்லித் தரும் அருமையான இணையதளம் இது. இதில் பந்தய வடிவிலான புதிர்போட்டிகளும் உண்டு. அவற்றில் கேட்கும் கணிதக் கேள்விகளுக்குச் சரியான விடையைக் கொடுத்தால் நம் வாகனம் வேகமாகப் போகும். தவறான பதில் தந்தால் வாகனம் மெதுவாகச் செல்லும். கழித்தல், பெருக்கல், வகுத்தல் என பலவித விளையாட்டுகளாக இருக்கும். வெல்லும் வேட்கையில் நிச்சயம் பிள்ளைகள், கணிதம் கற்பர். விளையாட்டு, படிப்பு இரண்டு விஷயங்களையும் ஒரே நேரத்தில் முடித்துவிடலாம்.

kids.nationalgeographic.com

Natgeo kids

பறவைகள், விலங்குகள், மீன்கள் என அனைத்தையும் குழந்தைகளுக்கு அற்புதமான அறிமுகம் செய்யும் தளம். காணொளிகள், படங்கள் மற்றும் அனைத்துத் தகவல்களையும் கொண்ட ஒரு வண்ணமயாமான தளம் இது. எடுத்துக்காட்டாக ஒரு பறவை என்றால் அதன் பெயர், நீளம், எடை, அது உயிர் வாழும் நாட்கள் என அத்தனை தகவல்களையும் இங்கு காணலாம். இது போன்ற சுவாரஸ்ய தகவல்கள் இங்கு ஏராளம். குழந்தைகள், உயிரினங்கள், பறவைகளின் புகைப்படங்களை அனுப்பினால் இத்தளத்திலேயே வெளியிடுவர்.

good house keeping

www.goodhousekeeping.com

வீட்டிற்குத் தேவையான பொருட்களை குழந்தைகளே தயாரிக்க கற்றுக்கொடுக்கும் இணையதளம் இது. மறுசுழற்சி முறையையும் இந்த இணையதளம் கற்றுக்கொடுக்கிறது. தையல், ஓவியம், சமையல், வீட்டை அலங்கரிக்கும் ஐடியாக்களை போன்ற அனைத்து அம்சங்களை இந்த இணையதளம் கற்றுத் தருகிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் இந்த இணையதளம் பிசியாக்கி வைக்கும்.

NASA App

Nasa app

குழந்தைகளுக்கு விண்வெளி என்றால் தனி ஆர்வம் உண்டு. அவர்களுக்கு விண்வெளி பற்றிய சந்தேகங்களுக்கான விடைகளை பெற்றோரிடத்தில்தான் தேடுவர். இது போன்ற சூழலில் தஞ்சம் புக வேண்டிய அப்ளிகேஷன் இது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா-வின்ஆப்தான் இது. இதில் ஆராய்ச்சிப் படங்கள், காணொளி பேன்றவற்றைக் காணலாம். மேலும் தினத்தோறும் புதிய தகவல்களை பதிவேற்றம் செய்துகொண்டே இருக்கிறது குழந்தைகளுக்கு விண்வெளி பற்றிய ஆர்வத்தை தூண்ட இத்தளத்தைப் பயன்படுத்தலாம்.

கொரோனாவின் எதிரொலியால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளையும் இந்த இணையதளத்தை காட்டி பிசியாக்கிவிடலாம்.

1newsnationuser5

Next Post

ஊரடங்கு காலத்தில் மக்களுக்காக தமிழ்புத்தாண்டில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம்.. எப்படி நடத்தினார்கள் தெரியுமா?

Tue Apr 14 , 2020
தமிழகத்தில் பொங்கல், தீபாவளி, ஆங்கில வருடப்பிறப்பு, தமிழ்வருடப்பிறப்பு என முக்கிய பண்டிகைகள் எதுவாக இருந்தாலும் நம் எல்லோர் வீடுகளுக்கும் தன்னுடைய குழுக்களோடு வருபவர் தான் சாலமன் பாப்பையா. ஆனால் ஊரடங்கு நேரத்தில் மக்களை கலையரங்கில் அமர வைத்து பட்டிமன்றம் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலை தான் நீடித்துவந்தது. இத்தகைய இக்கட்டான சூழலிலும், தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியோடு ஆன்லைன் வீடியோ கால் மூலம் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தினை இணையதளத்தில் நடத்தியுள்ளது […]
salaman papaiyah

You May Like