ரேஷன் கடைகளில் சூப்பர் திட்டம்..!! இனி மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

சிஎஸ்சியின் சேவைகளை ரேஷன் கடைகளில் அனுமதிப்பதன் மூலம் கடை விற்பனையாளர்களின் (Ration Shops Dealers) வருமானத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியும் என உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சஞ்ஜீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

நாட்டில், தற்போது 5,27,930 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில், 3 லட்சத்திற்கும் அதிகமான கடைகளை (565) தனியார் நபர்கள் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள், பொது விநியோக பொருட்களை மட்டுமே விற்பதன் மூலம் தங்களின் போதிய வருமானம் மற்றும் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, ரேஷன் கடைகளில், மற்றப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பேசிய சஞ்ஜீவ் சோப்ரா, பொது விநியோக பொருட்களைத் தாண்டி, எஃப்எம்சிஜி பொருட்களை (Fast Moving Consumer Goods) விற்க அனுமதிப்பதின் மூலம் ரேஷன் கடைகள் நவீனமயமாக மாறும் என்று தெரிவித்தார். இதற்கு, அனுமதி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், பல்வேறு மாநிலங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், ரேஷன் கடைகளில் கூடுதல் பொது சேவைகளை வழங்குவதன் மூலம் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மாதம் ரூ.50,000 வரை வருவாய் ஈட்டி வருவதாக தெரிவித்தார். முன்னதாக,ரேஷன் கடைகளில் ஆதார் எண் சேர்ப்பது, உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது போன்ற பொது சேவைகளை உள்ளிட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. இதுதொடர்பாக, கடந்த 2021இல் மத்திய விநியோகத் துறை, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, தற்போது, நாட்டில் சுமார் 40,000 நியாயவிலைக் கடைகளில் இந்த சேவை கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் மற்ற சேவைகளை அளிப்பதன் மூலம் ரூ.50,000 வருவாய் ஈட்டி வருகின்றனர்.

Chella

Next Post

முட்டைக்குள் நெளிந்த புழுக்கள்..!! திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Sun Feb 19 , 2023
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமனில் வாகலாண்ட் எனும் பெயரில் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்நிலையில், சுற்றுலா வந்த மாணவர்கள் சிலர் இந்த ஓட்டலில் தங்கியிருந்துள்ளனர். இவர்கள் காலை உணவாக முட்டை மசாலாவும், தோசையும் ஆர்டர் செய்திருந்தனர். இதில் இரண்டு மாணவர்களின் முட்டையில் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல, சில மாணவர்கள் இந்த மசாலாவை சாப்பிட்டு விட்டு, மயங்கி விழுந்தனர். இதனையடுத்து மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட […]

You May Like