மாமனார் மீது பாலியல் புகார் கொடுத்த துணை நடிகை..! மகளுக்கும் தொந்தரவு தருவதாக பரபரப்பு புகார்..!

தன்னுடைய மாமனார் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக துணை நடிகை புகார் அளித்துள்ளார். 

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், பாலகிருஷ்ண நகர் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனா நாச்சியார் (என்ற) ரஞ்சனா (37). இவர், தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மாமனார் சரவணவேல் தனக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து, கொலைவெறி தாக்குதல் நடத்தியாகவும், இதில் இருவரும் பலத்த காயம் அடைந்திருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

image
அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சரவணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது 73 வயதான சரவணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள சரவணவேலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.Chella

Next Post

அரசியல் சாசனத்தை கடுமையாக விமர்சித்த அமைச்சர்..! உரிய விளக்கம் அளிக்க முதல்வர் உத்தரவு..!

Tue Jul 5 , 2022
இந்திய அரசியல் சாசனம் தொழிலாளர் வர்க்கத்தை கொள்ளையடிக்கவே உதவுகிறது என்ற கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சாஜி செரியன் பேசுகையில், ”அழகான அரசியல் சாசனத்தை நாம் கொண்டிருக்கிறோம் என அடிக்கடி கூறுகிறோம் ஆனால், பிரிட்டிஷ் முறையை […]
அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை பேச்சு..! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சஜி செரியன்..!

You May Like