சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்: விஜய், அஜித், விக்ரம்.. நிராகரித்த படம் எது என்று தெரியுமா?

சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள், ஒரு ஒரு படம் நடித்தாலும் நல்ல கதையாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று நினைத்து கதைகளை தேர்வு செய்வார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் கதைகளில் வெளியாகும் படங்கள் சில அமோகமாக ஓடி வசூலை குவிக்கும். சில படங்கள் அட்டர் ப்ளாப் ஆகும். அப்படி சில இயக்குனர்கள் சில நடிகர்களிடம் கூறும் கதைகளை அவர்கள் நிராகரிக்கும் பட்சத்தில், அந்த கதையில் வேறொரு நடிகர் நடித்து வெளிவந்து, படம் பிரம்மாண்ட வெற்றியை தரும்.

அப்படி ஒரு படமாகத்தான் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த காக்க காக்க திரைப்படம் அமைந்தது. கௌதம் மேனன் இயக்கி, சூர்யா ஜோதிகா நடித்த இந்த திரைப்படம், சூர்யாவிற்கு எதிர்பாராத அளவு மிகப்பெரிய வெற்றியையும், சூர்யாவின் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படம் அவரது திரையுலக வாழ்கையை புரட்டி போட்டதாகவே சொல்லலாம் மேலும் சூர்யா அந்த படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என் என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் அந்த கதாபாத்திரம் அவருக்கு அமைந்தது.

இவ்வாறு இருக்க, அந்தப் படத்திற்காக கௌதம் மேனன் முதலில் நடிகர் விஜய்யை தேர்ந்தெடுத்து அவரிடம் தான் முதலில் இந்த படத்தின் கதையை கூறியிருக்கிறார். ஆனால் சில காரணங்களால் விஜய்யால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகர் அஜித்திடம் இந்த கதையை கூறியபோது அவர் கதையில் சில மாற்றங்களை கூறியதால் அவராலும் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அடுத்ததாக நடிகர் விக்ரம் இடமும் இந்த கதையை கௌதம் மேனன் கூறியுள்ளார் ஆனால் அவரும் இந்த படத்தில் நடிக்கவில்லை.

இதன் பிறகு கடைசியாக சூர்யாவுக்கு இந்த கதையை கூறியுள்ளார் கௌதம் மேனன் கதையை கேட்ட சூர்யா இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். படம் சூர்யாவிற்கு அமைய ஜோதிகாவும் ஒரு காரணம் என்று கூறுகின்றனர். இந்த படம் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியையும், சூர்யாவுக்கான அங்கீகாரத்தையும் அளித்தது. இந்த படம் வெளிவந்த பிறகு தான் சூர்யாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. பல நடிகர்களால் நடிக்க முடியாமல் போன இந்தப் படம், சூர்யாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது என்றால் மிகை இல்லை.

Baskar

Next Post

மக்கள் அதிகம் பயன்படுத்தும் Dolo 650 நிறுவனம் செய்த பலே மோசடி..! ரூ.1000 கோடிக்கு பரிசு பொருள்..!

Thu Jul 14 , 2022
விற்பனையை அதிகரிக்க மாத்திரை தயாரிப்பு நிறுவனம் மருத்துவர்களுக்கும், விற்பனை முகவர்களுக்கும் ரூ.1,000 கோடிக்கு பரிசு பொருட்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது. நாட்டில் மொத்தம் 9 மாநிலங்களில் 36 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ1.2 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ1.4 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். Dolo 650 மாத்திரைகளை, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலும் பரிந்துரை இல்லாமலும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். இந்த […]
மக்கள் அதிகம் பயன்படுத்தும் Dolo 650 நிறுவனம் செய்த பலே மோசடி..! ரூ.1000 கோடிக்கு பரிசு பொருள்..!

You May Like