“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

சுஷாந்த் சிங்கின் கடைசி பதிவு.. இன்ஸ்டாகிராமில் இறந்து போன தாய் குறித்து உருக்கம்..

தனது இறந்து போன தாய் குறித்து உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் சுஷாந்த் சிங் பதிவிட்டிருந்தது தற்போது வைரலாகி வருகிறது.

சுஷாந்த்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் வெளியகாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்பதும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுஷாந்தின் மறைவிற்கு திரைத்துறையினர் மட்டுமின்றி, அரசியல் மற்றும் விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

d8k85llo sushant singh

இதனிடையே சுஷாந்த் கடைசியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இறந்து போன தாய் குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். கடந்த 3-ம் தேதி அவர் வெளியிட்ட பதிவில் “ கண்ணீர் துளியில் இருந்து ஆவியாகும் மங்கலான கடந்த காலம், முடிவில்லாத கனவுகள் புன்னைகையின் வளைவை செதுக்குகின்றன.. மற்றும் விரைவான வாழ்க்கை.. இவை இரண்டும் இடையே பேச்சுவார்த்தை.. அம்மா” என்று பதிவிட்டிருந்தார்.

Kai Po Che! என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சுஷாந்த, சுதேசி ரொமேன்ஸ், பி.கே, கேதர்நாத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். MS தோனி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனி கதாப்பாத்திரத்தில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். கடந்த ஆண்டு வெளியான சிச்சோர் என்ற படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்ததார். கடந்த வாரம் சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

பரோட்டாவிற்கு எதுக்கு 18% ஜி.எஸ்.டி: சட்டம் தந்த விசித்திர விளக்கம்

Sun Jun 14 , 2020
பரோட்டாவிற்கு 18% வரி விதித்ததற்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள விளக்கம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் முக்கிய உணவுப் பொருளாகத் திகழ்வது பரோட்டா. இதற்கு 18 % ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. ஆனால், சப்பாத்தி ரொட்டி ஆகியவற்றுக்கு 5 % மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபாடு எதற்காக என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்த நிலையில் அதற்கான பதில் வெளியாகியிருக்கிறது. அதாவது […]
ஜிஎஸ்டி வரி உயர்வால் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டான பரோட்டா

You May Like