மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

“ பாஜகவைப் பற்றி பேச அருகதை இல்லாத ஓசி பிரியாணிகள்..” சுப வீரபாண்டியனை கடுமையாக விமர்சித்த எஸ்.வி சேகர்..

சுபவீரபாண்டியன் போன்றவர்கள் பாஜகவைப்பற்றி பேச அருகதை இல்லாத ஓசி பிரியாணிகள் என்று எஸ்.வி. சேகர் விமர்சித்துள்ளார்.

sve sekar

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பிறகு, தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. அதன்பிறகு தலைவர் பதவியை நியமிப்பதில் குழப்பம் நீடித்து வந்ததால், கடந்த 6 மாதமாக அந்தப் பதவி நிரப்படாமலே இருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவரின் பதவிக்கு பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இதனிடையே ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், கே.டி. ராகவன், ஏ.பி முருகானந்தம் இவர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக கூடும் என்று தகவல் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல். முருகன் என்பவரை டெல்லி தலைமை தமிழக பாஜக தலைவராக நியமித்தது.

bjp leader l murugan

இந்த சூழலில் தி.க தலைவர் சுபவீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து பதிவிட்ட அவர் “ நம்மவர்கள் கோயில் அர்ச்சகர்களாகக் கூட ஆகி விட்டனர். ஆனால் பாஜக வில், ஹெச்.ராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட பார்ப்பனர்கள் எவரும் மாநிலத் தலைவர்களாகக் கூட ஆக முடியவில்லையே, ஏன்? ஏனெனில் இது பெரியார் மண்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சுபவீரபாண்டியனின் இந்த கருத்துக்கு, பாஜக தலைவர் எஸ்.வி சேகர் பதிலளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆனா உங்க வாய்தான் காதுவரை கிழியுது. செயல்ல ஒரு தலித்தைகூட தலைவராக்ககூடிய நல்ல புத்தியில்லா சாதி வெறி பிடித்து அலையும் நீங்கள் பாஜக வைப்பற்றி பேச அருகதை இல்லாத ஓசி பிரியாணிகள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

தாய்-மகன் இடையே தகராறு...தாயை கொன்ற மகன் கைது…

Sat Mar 14 , 2020
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தாய்- மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த மகன், தாயின் தலையில் கட்டையால் அடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. கணவனை இழந்த இவர் 2 மகள்கள், ஒரு மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். மகன் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக, சொந்த வீட்டை […]
krishnagiri murder

You May Like