அதிமுகவின்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ கூட உள்ளது. அதிமுகவின்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ கூடுகிறது. அதிமுகவின்‌ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர்‌ நடக்கவிருக்கும்‌ முதல்‌ செயற்குழு கூட்டம்‌ என்பதால்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல்‌ 7-ம்‌ தேதி செயற்குழு அறிவிக்கப்பட்டு பின்னர்‌ அது ரத்து செய்யப்பட்டது. மோடியின்‌ வருகையை காரணம்‌ காட்டி செயற்குழு […]

நம்பிக்கைத் துரோகி எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளின் வலுவின்மையில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு இதைத்தான் உணர்த்தியுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில், அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்தத் […]

அதிமுக சின்னத்தை முடக்க கோரி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் […]

அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என முன்னாள் ஐ.டி விங் செயலாளர் பகிரங்க கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அணிக்கும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது. அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை இரண்டு குழுக்களும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு […]