மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்மிருதி இரானி ” ஒரு அறிவிப்பை வெளியிடும் போது வார்த்தைகளைத் தேடுவது எனக்கு அரிது. எனவே இங்கே இதை எளிமையாக வைத்திருக்கிறேன். எனக்கு கோவிட்19 பாசிட்டிவ் ஆகியுள்ளது. என்னுடன் தொடர்பு கொண்டவர்களை விரைவாக சோதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிரிதி இரானிக்கு 44 வயதாகிறது. பீகார் […]
corona latest
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கடந்த சில நாட்களாக எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதனையடுத்து கொரோனா சோதனை செய்துகொண்ட போது, கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்தியாவில் கடந்த […]
இந்தியாவில் கடந்த 10 நாட்களில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, இதுவரை உலகம் முழுவதும் இதுவரை 78 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 21 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானதால், உலகிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க […]
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற, 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே அடுத்த உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்ததற்கு பின் அப்பெண்ணிற்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அப்பெண்ணின் இறுதிச்சடங்கில் தடையை மீறி 70 பேர் வரை பங்கேற்றுள்ளனர். மே 25ம் தேதி பெண்ணின் உடலை வெளியே எடுக்க […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக அதிகரித்து உள்ளது உயிரிழந்தோர் […]
மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இடவசதி இல்லாததால், ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிர்ஹன் மும்பை மாநகராட்சித் தகவல்களின் படி 645 ஐசியு படுக்கைகளில் 99 சதவீதம் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 4,292 படுக்கைகளில் 65 சதவீதம் படுக்கைகள் […]
நேற்று ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,000-ஐ தாண்டியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று இதுவரை 200-க்கும் மெற்பட்ட நாடுகளில் பரவி, மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் நோய் பரவி 6 மாதங்கள் ஆகியும், இன்று வரை கொரோனா தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை. ஒருபுறம் கொரோனாவிற்கான தடுப்பு […]
வரும் மே 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக இம்முறை பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இதனை மேலும் 2 வாரங்களுக்கு […]
நேற்று மட்டும் புதிதாக 3,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,000-ஐ நெருங்குகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு தற்போது 3-வது கட்டமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 கட்ட ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த அரசு, தற்போது ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை 3-ம் கட்டமாக நீட்டித்துள்ளது. எனினும் நோய் பரவல் கட்டுக்குள் வந்ததா என்று கேட்டால், […]
இந்தியாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. தற்போது, இதன் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதன் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு 3வது முறையாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இருந்தும் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்த […]