fbpx

உபரி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் என பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணிபுரிய செய்யும் நடைமுறை பல்லாண்டுகளாக அரசு வகுத்துள்ள விதிகளின்படி வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற நடைமுறை குறித்து வழக்கு …

நீதிமன்றங்களின் வேலை நேரம், வேலை நாட்கள் மற்றும் விடுமுறைகள் ஆகியவை அந்தந்த நீதிமன்றங்களால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர்; உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 145 வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தின் நடைமுறை மற்றும் அதன் அமர்வுகள் மற்றும் …

பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், கொரோனா காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 15 சதவீதத்தை தனியார் பள்ளிகள் தள்ளுபடி செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி, அடுத்த கல்வி அமர்வில் 15 சதவீத கட்டணத்தை கணக்கிட்டு மாற்றி அமைக்க வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்திய அல்லது பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு, அந்தத் தொகையை கணக்கிட்டு …

திருமணம் முடிந்தவுடன் மகள் சொத்து எதையும் பெறக்கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டிய நேரம் இது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. மகளின் திருமணம் குடும்பத்தில் அந்தஸ்தை மாற்றாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுதோஷ் ஜே சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது சகோதரியை எதிர்மனுதாரராக …

தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது …

இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து பெற்றாலும், மறுமணம் செய்யும் வரை அவர்களுக்கு முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஜாஹிதா கட்டூன் என்ற இஸ்லாமிய பெண் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் …

சென்னை நந்தம்பாக்கத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சாலையை, 2009ம் ஆண்டு முதல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, பட்டாபிராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வருவாய் துறை ஆவணங்களில் பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ள இடத்தை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் அங்கு உள்ள மக்கள் …

மனைவியின் சட்ட விரோத கட்டுப்பாட்டில் உள்ள இரட்டை குழந்தைகளை மீட்டு தரக்கோரி அமெரிக்கா வாழ் இந்தியரான கிரண் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தானும், தன் மனைவியும் இந்தியாவில் பிறந்திருந்தாலும் தற்போது அமெரிக்க குடிமக்களாக உள்ளதாகவும், பிறப்பால் தமது இரு குழந்தைகளும் அமெரிக்க குடிமக்கள் என தெரிவித்துள்ளார்.

கடந்த …

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை …

கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் கண் முன் வருவார். அந்த வகையில் கேரளா மாநிலத்திற்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை பயணத்தில் ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு சரியான வசதிகளை உறுதி செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கொச்சி தேவஸ்தானத்திற்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.…