fbpx

மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்று அழைக்கப்படும் HMPV என்பது ஒரு பொதுவான சுவாச வைரஸ் ஆகும். இது பொதுவாக அனைத்து வயதினரிடையேயும் லேசானது முதல் கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது. இருப்பினும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது.

உலகளவில் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளில் 4-16% இந்த வைரஸ் காரணமாகும், …

சீனாவில் பரவி வந்த HMPV வைரஸ் சமீபத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் லேசானது முதல் தீவிர பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் பொதுவான அறிகுறிகளாக இருக்கும் குளிர் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகளை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. சிலருக்கு நிலைமை மோசமடையலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு செலவாகும்..?

பிரான்சுக்குப் பிறகு, சீனாவில் புதிய வகை மங்கிபாக்ஸ் வைரஸான கிளேட் 1பி அடையாளம் காணப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது உருமாற்றமடைந்த குரங்கம்மை வைரஸின் புதிய வெர்ஷன் கண்டறியப்பட்டுள்ளது. காங்கோ நாட்டுக்கு சென்றுவந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் அரிப்பு, கொப்பளங்கள் உள்ளிட்ட ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. …

கோவிட்-19 தொற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சீனாவில் HMPV பாதிப்பு அதிகரித்துள்து. இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய சுவாச தொற்றாகும்.. சீனாவை தொடர்ந்து இந்தியா, மலேசியா மற்றும் ஹாங்காங்கிலும் HMPV பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .

இந்தியாவில் சுமார் 10 பேருக்கு HMPV …

HMPV வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே. மணி, விஜயபாஸ்கர், வேல்முருகன் உள்ளிடோர் எச்எம்பிவி வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சீனாவில் பரவி வரும் …

திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில், எட்டு மாத ஆண் குழந்தைக்கும், மூன்று மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள், வெளிநாடு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மத்திய …

சீனாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது உலகம் முழுவதும் சுகாதாரம் தொடர்பான கவலைகளை எழுப்பி உள்ளது. இந்தியாவில் பல HMPV பாதிப்புகள் உறுதியாகி வரும் நிலையில், நாட்டில் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

HMPV என்பது மேல் சுவாசக்குழாய் வைரஸ் ஆகும், இது ஜலதோஷம் அல்லது காய்ச்சலால் ஏற்படும் நோய்த்தொற்றுகளைக் கொண்டுவருகிறது. இருப்பினும், சில …

2019 டிசம்பரில், முதன்முதலில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனாவின் முதல் அலை பெரும்பாலும் வயதானவர்களை பாதித்தது. ஆனால் இரண்டாவது அலை, டெல்டா மாறுபாடு இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து மேல் சுவாசக் குழாயை மட்டுமே பாதிக்கும் ஒமிக்ரான் …

HMPV தொற்று குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

HMPV தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்த வைரஸ் பரவியது முதல் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களை …

சீனாவில் தற்போது HMPV வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இது அடுத்த பெருந்தொற்றாக மாறுமா என்ற கவலை எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் நேற்று கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் HMPV பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்த நிலையில் இன்று மகாராஷ்டிராவில் 2 பேருக்கு HMPV பாதிப்பு உறுதியானதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை …