திருப்பூரில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பி வருவோர் மீது திருப்பூர் மாநகர காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை குழுவினர் சமூக வலைதளங்களை கண்காணித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பியவர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இதில் பிரசாந்த்குமார்( 32) என்பவரின் முகநூல் பக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது […]

தமிழகத்தில் பீகார், கர்நாடகா போன்ற வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களை தமிழக மக்கள் தாக்குவதாக கடந்த சில தினங்களாக வதந்தி ஒன்று பரவியது. இதனை வெறும் வதந்தி தான் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு சார்பாகவும், தமிழக காவல்துறை சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் விகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அந்த மாநிலத்தில் இதற்காக ஒரு சிறப்பு குழுவை அமைத்து அந்த […]

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியிருக்கிறார். ஒற்றுமையாக இருக்கின்ற நாட்டில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக, சிலர் தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருப்பதாக அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி வழங்கி இருக்கின்றார். மற்ற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து வேலை பார்ப்பதை போல தமிழர்கள் பலரும் […]

புலம்பெயர்ந்த வட மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் அவ்வப்போது தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் விஷமிகள் மூலமாக பரப்பப்பட்டுள்ளது. அவ்வாறு பொய்யான செய்தியை பரப்பியவர்கள் யார், யார் என்று அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடவடி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் […]

வடமாநிலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் தற்போது வட மாநில இளைஞர்கள் பலர் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் முக்கால்வாசி தமிழகத்தை வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து விட்டதாக சில குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில், திருப்பூர் அருகே தண்டவாளத்தில் வட மாநில தொழிலாளியின் பிணம் கண்டெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்து சக தொழிலாளர்கள் ஒன்று […]