ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், […]

பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் ‌. இது குறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மையை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கருக்கும், இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் […]

ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் […]

அண்ணா அறிவாலயத்தில் வரும் 20- ம்‌ தேதி திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழு கூட்டம்‌ நடைபெறும்‌ என பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார்‌. இது குறித்து அவர்‌ வெளியிட்ட அறிக்கையில்; திமுக தலைவர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உயர்நிலை செயல்‌ திட்டக்‌ குழுக்‌கூட்டம்‌ வருகின்ற 20.5.2023 தேதியன்று சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில்‌ சென்னை அண்ணா அறிவாலயத்தில்‌ உள்ள திமுக அலுவலகத்தில்‌ பொதுக்கூட்டம்‌ […]

முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ தலைமையில்‌ சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவைக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மாலை 5 மணியளவில்‌ நடைபெறும்‌ அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌, பட்ஜெட்‌ கூட்டத்தொடரில்‌ அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌, துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள்‌ மற்றும்‌ அவற்றை செயல்படுத்தும்‌ நடைமுறைகள்‌ குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சட்ட பேரவையில்‌ நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்‌ குறித்து […]

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் சென்றார். அமைச்சர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் டெல்லி […]

முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; மக்களின்‌ வாழ்வாதாரம்‌ முன்னேற வழிவகை செய்யாத திறனற்ற திமுக அரசு விலையேற்றம்‌ ஒன்றை மட்டுமே பரிசாக வழங்கி வருகிறது.திறனற்ற திமுக, ஆட்சிக்கு வந்த நாள்‌ முதல்‌ தொடர்ச்சியாக விலையேற்றம்‌ ஒன்றை மட்டும்‌ மூன்று மாத இடைவெளியில்‌ மக்களுக்கு பரிசாக வழங்கி வருகிறது. […]

பாஜக அல்லாத பிற மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில்; இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது. நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதைக் காண்கிறோம். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது […]

ஆவின் பால் மற்றும் அதன் உப பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் […]

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும்‌ பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டுகளைப்‌ போலவே, 2023 ஆண்டிலும்‌ ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும்‌ என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள்‌ வந்துள்ளன. 2023-ம் ஆண்டு, ரமலான்‌ மாதத்தில்‌ நோன்பு நோற்கும்‌ இஸ்லாமிய மக்களுக்கு […]