புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்குள் இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்; கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு கட்டுக்குள்தான் உள்ளது. டெங்கு மட்டுமில்லாமல் இதர காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கொசு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து துறைகளும் தற்போது இணைந்து பணியாற்றுகின்றனர். …