fbpx

பணத்தின் அருமை என்பது வறுமையில் இருக்கும் போது தான் தெரியும் என்பார்கள், ஆகையால் சேமிப்பு மிகவும் அவசியம் ஆகின்றது.  எனவே வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் அதிக வட்டியுடன் என்னென்ன சேமிப்புத்திட்டங்கள் உள்ளது? அதிக வட்டியுடன், வரிப் பொறுப்பையும் குறைக்கும் அஞ்சலக சேமிப்புத்திட்டங்கள் குறித்து இங்கே முழுமையாக தெரிந்துக் கொள்வோம்.

தேசிய சேமிப்பு நேர வைப்பு

நம் நாட்டில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமக்கள் எனக் கணக்கீடு செய்துள்ளனர். அதேப் போல் அவர்களின் சராசரி வயது படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில், மூத்த குடிமக்களின் சவால்களும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் நிதிப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. …