பண்டைய காலம் முதலே நம் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் சுக்கு மிளகு திப்பிலி ஆகிய நறுமணப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் திப்பிலி பல அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. திப்பிலியின் மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றால் கட்டுப்படும் நோய்கள் பற்றி பார்ப்போம். மருத்துவ மூலிகையான திப்பிலியில் பீட்டாசிட்டோஸ்டெரல், ஆல்கலாய்டுகள் போன்ற வலி நிவாரணிகள் நிறைந்திருக்கிறது. இவற்றில் யூஜனால்,பைப்ரின்கள்,கிளைகோசைடுகள், ரெசின்கள், டர்பனாய்டுகள் போன்ற பல என்சைம்கள் நிறைந்து இருக்கின்றன. […]