தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிகள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தொழில்நுட்ப பிரிவு, கணக்கு பிரிவு, நிர்வாகப் பிரிவு, அறிவிப்பு பிரிவு, சட்டப்பிரிவு, தகவல் அறியும் உரிமைப் பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு மற்றும் தகவல் மையப் […]

பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்கு போட்டித் தேர்விற்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளது போல, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படாது. […]

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கு கணினி வழித்தேர்வு ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை 2022 மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரையில் பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி […]

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்று தேர்வில் 21,543 பேர் தகுதிப் பெற்றுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022 எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதித் தேர்வு தாள் ஒன்று, கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கான தேர்வினை 1,53,233 […]

ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது அறிவிப்பில்; பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 4 பேரின் விண்ணப்பங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம், கையெழுத்து சரியாக இல்லாத 12 பேரின் விண்ணப்பமும், தேர்வர்களின் பெயர்களை சரியாக பூர்த்திச் செய்யாத 23 பேர் என 39 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு […]

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3,236 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் நடைபெற்ற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நடப்பாண்டில் 2,955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் […]

TRB பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக தமிழை தகுதித் தேர்வாக, விரிவுரையாளர் தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பில்; தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவேண்டும். அவ்வாறு தேர்ச்சிப் […]