
கொரோனா பாதிப்பின் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் தொடர்ச்சியாக படங்கள் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் 70 நாட்களுக்கு மேலாக திரையரங்குள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரசிகர்களின் வசதிக்காக பல புதிய திரைப்படங்களை ஒடிடி எனப்படும் ஆன்லைனில் நேரடியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆன்லைனில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் வரும் ஜூன் 19 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அருண்விஜய் கார்த்திகா நாயர் நடித்து பல வருடங்களாக வெளியீட்டிற்கு காத்திருக்கும் வா டீல், மம்மி சேவ் மீ , ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள அண்டாவ காணோம் திரைப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அப்படங்களின் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஆன்லைனில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களுக்குகிடையே நல்ல வரவேற்பினை பெறும் பட்சத்தில் வரும் காலங்களில் திரையரங்குகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை..