உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

கோவை நிறுவனம் அசத்தல்: 80 முறை துவைத்து பயன்படுத்தக் கூடிய பிபிஇ கிட்

சுமார் 80 முறை மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் வகையிலான, பிபிஇ பாதுகாப்பு உடைகளை தயாரித்து கோவையைச் சேர்ந்த ஜவுளி நிறுவனம் அசத்தி உள்ளது.

IMG 20200629 091857

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பிபிஇ எனப்படும் முழு உடல் பாதுகாப்பு உடைகள் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிபிஇ கிட்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பிபிஇ கிட்கள், கையுறைகள் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கான முக கவசங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

குறிப்பாக பிபிஇ கிட்டுகளை ஒருமுறை கழற்றிவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. வேறு உடைதான் அணியவேண்டும். இதனால் பிபிஇ கிட்டுகள் தொடர்ந்து தேவைப்படுவதோடு, அதிக செலவும் ஏற்படுகிறது.

202006290843012606 Tamil News Coimbatore based textile company developed PPE coveralls SECVPF

இந்த குறையைப் போக்கும் வகையில், மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் வகையிலான பிபிஇ உடையை கோவையைச் சேர்ந்த ஜவுளி தொழிற்சாலை உருவாக்கி உள்ளது. 80 முறை கிருமி நீக்கம் செய்து இந்த பிபிஇ கிட்டை பயன்படுத்த முடியும் என்பது அதன் தனிச் சிறப்பு.

இதுபற்றி தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 80 முறை துவைத்தாலும் துணியில் குளோரின் ரீசார்ஜ் செய்யும் திறனை இந்த பிபிஇ கிட் கொண்டுள்ளது. இது தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா) ஆன்டிமைக்ரோபியல் சான்றிதழை பெற்றுள்ளது.

IMG 20200629 091617

பிபிஇ கிட் தயாரிப்பதற்காக நாங்கள் பயன்படுத்தி உள்ள துணியில் குளோரின் கிருமிநாசினி பண்புகள் உள்ளன. இந்த கிருமிநாசினியின் தன்மையானது, துணியின் மேற்பரப்பில் இரண்டு வாரங்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும். துவைக்கும்போது, துணியின் மூலம் குளோரின் மீண்டும் உறிஞ்சப்படுகிறது. முதலில் துவைக்கும்போது கிடைக்கும் இந்த பலன், கிட்டத்தட்ட 80 முறை துவைத்தபிறகும் கிடைக்கிறது’ என தெரிவித்துள்ளார். இதன் மூலம் செலவுகள் குறைவதோடு, மருத்துவ கழிவுகளும் குறையும்.

1newsnationuser4

Next Post

சர்க்கரை நோயாளிகளின் புண்களை ஆற்றும் இயற்கை அதிசயம் இது!!!

Mon Jun 29 , 2020
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக புண்கள் ஏற்ப்படும் போது அது ஆற அதிக நாட்கள் பிடிகிறது. இதானால் புண் வேதனையையும் தாங்கிக்கொள்ளும் அவலம் உருவாகிறது. இதனை ஐந்து நாட்களில் ஆற்றும் இயற்கை மருந்தை இங்கு காணாலாம். நாம் அனைத்து நோய்களையும் இயற்கை முறையில் வீடுகளில் தாயரிக்கும் மருந்துகள் மூலமே குணப்படுத்த முயலுவோம். இதனை கருத்தில் கொண்டு பெரும்பாலானோருக்கு பயன்படும் மருத்துவத்தை செய்முறை விளக்கத்துடன் கொடுத்துள்ளோம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் புண்கள் […]
dest prediabetes

You May Like