பெரும் சோகம்…!சரோஜா பாலசுப்ரமணியன் காலமானார்…! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்…!

சரோஜா பாலசுப்ரமணியன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான சரோஜா பாலசுப்ரமணியன் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில்; விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களின் தாயாரும், பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியாருமான திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்றறிந்து வேதனை அடைந்தேன். அன்பு அன்னையை இழந்து தவிக்கும் திரு.சீனிவாசன் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

காலை உணவாக இதை சாப்பிடுங்கள், உடல் எடையை வேகமாக குறையுங்கள்…!!

Mon Nov 7 , 2022
ஒரு நாளை தொடங்குவதற்கு, காலை உணவு மிக முக்கியமான ஒன்றாகும். எடை இழப்பை எளிதாக்குவதில் இது மிகவும் முக்கியமானது என்றும் கூறப்படுகிறது. அந்த காலை உணவில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல் நாள் முழுக்க உங்கள் உடலில் தங்கியிருக்கும். அதனால் என்ன மாதிரி காலை உணவு எடுத்துக் கொள்வது சிறந்தது என்று இங்கே பார்க்கலாம். இது உங்களுக்கு, ஒரு நாளுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் ஒரே […]
உடல் எடையை குறைக்க வெந்நீர் குடிக்கிறீங்களா..? இப்படி செஞ்சு பாருங்க உடனே ரிசல்ட் கிடைக்கும்..!!

You May Like