தமிழக அரசின் அலட்சியப்போக்கே வன்முறைக்கு காரணம்..! – சசிகலா குற்றச்சாட்டு

தமிழக அரசின் அலட்சியப்போக்கே கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணம் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர்களும், சக மாணவர்களும் நியாயம் கேட்டு போராடி வரும் நிலையில், அது வன்முறையாக வெடித்துள்ளது. இதில், மாணவர்கள் மீது தடியடி மற்றும் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்து 6 நாட்கள் ஆகியும் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதாலே, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று வன்முறையாக வெடித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

தமிழக அரசின் அலட்சியப்போக்கே வன்முறைக்கு காரணம்..! - சசிகலா குற்றச்சாட்டு

மேலும், இந்த வன்முறைக்கு தமிழக அரசின் அலட்சியப்போக்கே காரணம் என அனைவரும் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் குறுக்கீடு இல்லாமல் காவல்துறை வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான், உயிரிழந்த மாணவிக்கும், சக மாணவர்களுக்கும் மற்றும் மாணவியின் பெற்றோர்களுக்கும் இந்த நேரத்தில் ஆறுதல் அளிக்கக் கூடியதாக அமையும்.

தமிழக அரசின் அலட்சியப்போக்கே வன்முறைக்கு காரணம்..! - சசிகலா குற்றச்சாட்டு

அதேபோல், ஒருதவறை சுட்டிக்காட்ட மற்றொரு தவறு செய்யக்கூடாது. வன்முறை எதற்கும் தீர்வாகாது என சுட்டிக்காட்டியுள்ள சசிகலா, அமைதியான முறையில் போராடி நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, மாணவி உயிரிழப்பில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Chella

Next Post

’பொங்கல் பரிசுத் தொகுப்பில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் என்று பாருங்கள்’..! அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!

Mon Jul 18 , 2022
நான்கு வருடம் வண்டி ஓடும், நான்கு வருடம் முடிந்த பிறகு பொங்கல் தொகுப்பில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் என்று பாருங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூர் பகுதியில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கடந்த 8 ஆண்டுகளில் 14 லட்சம் பேர் கான்கிரீட் வீடுகளைக் கட்டி சொந்த வீடுகளில் வாழ்வதாகவும், இந்தியாவில் […]

You May Like