தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென டெல்லி பயணம்…! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் கையொப்பமிட நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது.

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளிக்க உள்ள பொது மனுவில் கையெழுத்திடுமாறு எதிர்க்கட்சிகளை தி.மு.க கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் இரண்டு நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல உள்ளார் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

"எங்க வேகத்தை திமுகவால் குறைக்க முடியாது" பாஜக மாநில தலைவர்(ஐடி) கொந்தளிப்பு.!

Thu Nov 3 , 2022
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு தரவிருந்த வருகை தள்ளி போனதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களின் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இதனை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, வழக்கு மீதான விசாரணைக்கு ஆஜரான […]

You May Like