தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்..? திமுக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 2021இல் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக முக.ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது, பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட உடனேயே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், ஆளுநருக்கும்-தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிழவி வருகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்..? திமுக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!

இந்நிலையில், தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் ஒரே கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பவுள்ளனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு விடுத்துள்ள அழைப்பில், ”ஒரே எண்ணம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழக ஆளுநரை உடனடியாக வாபஸ் பெறுவது தொடர்பாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் அண்ணா அறிவாலய தலைமையகத்திற்கு நேரில் சென்று படித்து கையொப்பமிடுமாறு திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

’’பாலம்விபத்து கடவுளின் விருப்பம்’’…ஒரேவா மேலாளர் கூறிய பதில்…

Wed Nov 2 , 2022
பாலம் விபத்தில் ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிபதியிடம் இந்த விபத்து கடவுளின் விருப்பம் என பதில் அளித்துள்ளது மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கும் பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 141 பேர் உயிரிழந்த நிலையில் 170 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலத்தை பராமரித்த ’ஒரேவா’ என்ற […]
அரசின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிரை காவு வாங்கிய தொங்கு பாலம்..? பதைபதைக்கும் வீடியோ

You May Like