மது போதையில் மிதக்கும் தமிழகம்… இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போவுதோ இந்த சுவர்..!

கோவில்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரர் காவல்துறையினால் கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்குத் திட்டங்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா (73 ). இவர் விவசாயி. இவரது மகன் ஜெயக்குமார் (43). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

அப்போது இவரது தந்தை சுப்பையா ஜெயக்குமாரை கண்டித்துள்ளார். இதில் கோபம் அடைந்த ஜெயக்குமார் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தை சுப்பையவை சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த சுப்பையா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னா் சுப்பையா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். மனைவியிடம் தகராறு செய்ததை கண்டித்த தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Baskar

Next Post

நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்கும்.! வெளியான முக்கிய அறிவிப்பு..!

Mon Jul 18 , 2022
நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து பள்ளியில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. ஆனால், அரசிடம் அனுமதி பெறாமல் பள்ளிகளை மூடக்கூடாது […]
இன்னும் ஓரிரு நாளில் கனியாமூர் தனியார் பள்ளி அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு..?

You May Like