13-ம் தேதி வரை பலத்த காற்றுடன் மிதமான மழை…!

தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்ஒருசில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 13-ம் தேதிவரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14, 15-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

12-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 13-ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 106 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரி, கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பநிலை இருக்கக் கூடும்.

Vignesh

Next Post

தெரு விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான திட்டம்...! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...!

Fri May 10 , 2024
கோடை காலத்தில் தெரு விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான திட்டங்கள் குறித்து அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வெப்ப அதிகரிப்பு மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தண்ணீர் மற்றும் உணவுக்காக போராடும் தெரு விலங்குகளுக்கும் ஒரு பிரச்சனையாக இருப்பதாகக் கூறி, விலங்குகள் நல அறக்கட்டளையின் நிறுவனர் வி.இ.சிவா என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த கோடை காலத்தில் தெருநாய்கள், பூனைகள் மற்றும் இதர விலங்குகளுக்கு உணவு மற்றும் […]

You May Like