வரும் ஜூலை 10ம் தேதி தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நர்சரி, ப்ரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொது செயலாளர் நந்தக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனியார் பள்ளிகள் திறக்காத இந்த வேளையில் மாணவர்கள் சேர்க்கைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடமிருந்தும் பள்ளி கட்டணங்களை வசூலிக்காமல் வேலை செய்யும் ஆசிரியர், ஊழியர்களுக்கு சம்பளம் தர இயலவில்லை.
நிர்வாகம் சார்ந்த பொருளாதார சிக்கலும் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக 2018-2019 ஆண்டு இலவச கல்வி திட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களின் 40% கல்வி கட்டணமும் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து 2019-2020 ஆண்டின் தொகை முழுமையாக நிலுவையில் உள்ளது.
மேலும் பள்ளி வாகன வரி ரத்து, அங்கீகார நிபந்தனை புதுப்பித்தல், ஓராண்டுக்கு இ.பி.எப் – இ.எஸ்.இ சொத்து வரி விலக்கு போன்ற கோரிக்கைகள் முன்னதாகவே மத்திய அரசிடமும் மாநில அரசிடமும் வலியுறுத்தியுள்ளோம். இதனால் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓட்டுநர்கள் உள்ளபட 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 10 ம் தேதி கலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் அவரவர் வீடுகளுக்கு முன்னதாக சமூக இடைவெளியுடன் நடைப்பெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.