தமிழகத்தில் ஜூலை மாதம் வெளியிட இருந்த தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து விளக்கம் அளித்த செங்கோட்டையன் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லை எனவும் பள்ளிகள் திறக்க நீண்டநாள் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவிருந்த நிலையில் தற்போது அதில் சில சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்த போவதாகவும் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.