தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் பிஎஸ்சி, பி காம் மற்றும் சமூகவியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையம் சார்பாக அந்தத் துறையில் 53 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையத்தில் திட்ட அலுவலர் மற்றும் தரவு ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் 53 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 23. 2. 2023 தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையத்தில் நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் திட்ட அலுவலர் பணிகளுக்கு நான்கு காலியிடங்களும் மாவட்ட திட்ட அலுவலர் பணிகளுக்கு 32 காலியிடங்களும் கணக்காளர் பணிகளுக்கு 15 காலியிடங்களும் மூத்த கணக்காளர் பணியிடங்களுக்கு ஒரு காலியிடமும் தரவு ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஒரு காலியிடமும் இருப்பதாக அந்த ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பில் வெளியிட்டிருக்கிறது.

திட்ட அலுவலர் பணிகளுக்கு கல்வித் தகுதியாக சமூக ஆராய்ச்சி/பொருளாதாரத்தில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தரவு ஆய்வாளர் பணிகளுக்கு கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூத்த கணக்காளர் மற்றும் கணக்காளர் பணிகளுக்கு கணக்கியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட அலுவலர் பணிகளுக்கு ஊதியமாக 75 ஆயிரம் ரூபாயும் மூத்த கணக்காளர் பணிகளுக்கு ஊதியமாக 30,000 ரூபாயும் கணக்காளர் பணிகளுக்கு ஊதியமாக 25000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரவு ஆய்வாளர் பணிகளுக்கு ஊதியமாக முப்பதாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட திட்ட அலுவலர் பணிகளுக்கு ஊதியமாக 40,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர விரும்புவோர் தங்களது விண்ணப்ப படிவங்களையும் கல்விச் சான்றிதழ் மற்றும் பிர ஆவணங்களை மின்னஞ்சல் மூலமாக recruitment.tnpwdrights@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பலாம். மேலும் தபால் மூலமாக அனுப்புவோர் மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம், எண்.5, காமராஜர் சாலை, லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பவும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கான பிறகு விபரங்களுக்கு scd.gov.tn.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Baskar

Next Post

சுயதொழில் தொடங்க ஆசையா..? ஏதேனும் குழப்பம் இருக்கா..? மிஸ் பண்ணாம நாளைக்கு இதை பண்ணுங்க..!!

Tue Feb 14 , 2023
சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமானது நாளை (15.02.2023) காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயது நிறைவடைந்த அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முதற்கட்ட முகாமில், சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு […]

You May Like