#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

கொரோனா பரவத் தொடங்கியது முதல் தற்போது வரை.. முதலமைச்சரின் முரண்பாடான கருத்துகள்..

தமிழகத்தில் கொரானா பரவ தொடங்கிய காலத்தில் இருந்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த சில முக்கிய கருத்துக்களும் அதற்கு எதிராக எழுந்த விமர்சனங்களின் ஒரு தொகுப்பு.

tn cm edapadi

ஏப்ரல் 16ம் தேதி அன்று ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில்
இன்னும், இரண்டு, மூன்று நாட்களில் கொரானா தொற்று படிப்படியாக குறைந்துவிடும். ஏற்கனவே நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இந்த பரிசோதனை நடவடிக்கை காரணமாக, நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள், நோயாளிகள் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவுக்கு குறைந்து விடும், என்று எண்ணுவதாக தெரிவித்து இருந்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

மேலும், கொரானா தொற்று பணக்காரர்களுக்கு வந்த நோய்தான். ஏழைகளுக்கு எங்கு வந்தது கொரானா. வெளிநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த வந்த பணக்காரர்கள் தான் அங்கிருந்து நோயை கொண்டு வந்து இங்கு இறக்குமதி செய்தனர், அவர்களை கண்டால் தான் பயமாக இருக்கிறது என தெரிவித்தார்.

ஆனால், தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரித்ததில் இருந்து நோய்ததோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 500 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்து, பணக்காரர்கள் தான் நோய்த்தொற்று பரவ காரணம் என்ற முதலமைச்சரின் கருத்துக்கும் பெரும் எதிர்ப்புகள் எழுந்தன.

6 chennai international

தமிழகத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், சென்னையில் நோய்த்தொற்று அதிகம் ஏற்பட கோயம்பேடு சந்தையே காரணம். முன்னெச்சரிக்கையாக சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற அரசு வியாபரிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியது. ஆனால், தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என கூறி சந்தையை மாற்ற வியாபாரிகள் ஒத்துக்கொள்ளாததே தற்போது சென்னை அதிகளவில் பாதிக்க காரணம் என தெரிவித்தார்.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா உறுதி...

நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையை உணர்ந்து, வியாபாரிகளை வெளியேற்ற தவறிய அரசு தற்போது வியாபாரிகள் மீது அந்த பழியை சுமத்துவது சரியல்ல என எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன.

திருமணம், இறுதிச்சடங்கு போன்ற பல முக்கிய நிகழ்வுகளில் குறிப்பிட்ட நபர்களே பங்கேற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு வருவாயை கருத்தில் கொண்டு 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை மே 7-ம் தேதி திறந்த அரசின் முடிவுக்கும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் தமிழக அரசு; 4 நாட்களிலே மதுவிற்பனை இவ்வளவு கோடிக்கு வந்தா இல்லாமல் இருக்குமா

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் சென்னையில் மட்டும், கட்டுக்கு வந்ததாய் தெரியவில்லை.

images 9

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், சென்னையில் கொரானா தொற்று சமூக பரவல் நிலையை எட்டவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் சிறிய சிறிய வீடுகள், குறுகிய தெரு, நெரிசலான வீடுகளில் ஒரே வீட்டில் 7, 8 நபர்கள் வசிக்கின்றார்கள் அங்கு தான் நோய்த்தொற்று அதிகரிக்கிறது. அதில்தான் நாம் கொரானா தொற்றை கண்டறிய வேண்டும். தொற்று அங்கேதான் அதிகமாக ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருந்திருந்தால், இந்த நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டு இருக்காது.

ஏற்கனவே நோய் கண்டறியப்பட்ட பகுதி, கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற பகுதி, தடை செய்யப்பட்ட பகுதிகளில்தான் நோய் பரவல் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும், அனைவரையும் கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

குடிசைப்பகுதியில் வாழும் மக்கள் அதிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்வது என்பது சாத்தியமா என பலரும் தற்போது கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.

1newsnationuser4

Next Post

பல கிமீ நடந்து சென்று மணமகனை திருமண சிறையில் அடைத்த மணப்பெண்..

Sun May 24 , 2020
உத்தர பிரதேசத்தில் 80 கிமீ தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பெண் கோல்தி (20). இவருக்கும் அதே மாநிலம் கன்னோஜை சேர்ந்த வீரேந்திர குமாருக்கும் ( 24) கடந்த மே 4ம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து வசதி இல்லை. அதனால் […]
202005240521276480 Tamil News 20 Year Old Woman In Kanpur Walks 80 km Alone To Get Married SECVPF

You May Like