
சென்னை : கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மருத்துவக்குழுவினருடன் வரும் திங்கள்கிழமையன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா மக்களை ஆட்டிபடைத்துவரும் நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகளும் இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் தான் உலக நாடுகள் தவித்துவருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளையடுத்து தற்போது பாதிப்பின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துவிட்டது.

மேலும் தமிழகத்தில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகிவரும் நிலையில், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என முடிவுகளை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுவருகிறது. இதற்காக ஜூன் 15 ஆம் தேதியான திங்களன்று மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்ததிட்டமிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து ஜூன் 17 ல் பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.