பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..?

#BreakingNews : இதுவரை இல்லாத புதிய உச்சம்.. தமிழகத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,000-ஐ கடந்துள்ளது.

மொத்த பாதிப்பு

சீனாவின் உஹான் நகரில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் கூட, இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பலி எண்ணிக்கை 5,000-ஐ நெருங்கி உள்ளது.

இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் சராசரியாக 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

4coronavirus 69 3

இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இன்று மட்டும் புதிதாக 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184-ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 82 பேருக்கு இன்று தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 616 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சென்னை பாதிப்பு எண்ணிக்கை 13, 980-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12,000 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 160-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9,021 பேர் மருத்துவமனையில் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

சம்பளம் 20 கோடி ஆனால் வருமானம் 200 கோடி..போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற கோலி

Sat May 30 , 2020
கடந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பிரபலமான தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர் உள்ளிட்ட பிரபல 100 பேர் கொண்ட பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. அதேபோல ஒவ்வொரு துறையிலும் அதிக வருமான ஈட்டும் நபர்களின் பட்டியலும் அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 12 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் டாப் 100 பட்டியல் […]
download 22

You May Like