சசிகலா இன்னும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்..? பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்.. 190 ரூபாய் லேப்டாப் வழங்காததற்காக, அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 45,000 அபராதம்.. நுகர்வோர் ஆணையம் அதிரடி.. கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்..? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.. கள்ளக்காதலியோடு காரில் மாறி மாறி.. 'என் கணவருக்கு இதே தாங்க வேலை' போலீசில் புகார் அளித்த மனைவி..! ஆமை ஊர்ந்து தானே வரும்.. இது என்ன பறந்து வருகிறது..? காரில் மோதிய அதிர்ச்சி வீடியோ..! அடுத்த சில நாட்களுக்கு யுபிஐ பேமெண்ட்ஸ் வேலை செய்யாது.. வெளியான திடீர் அறிவிப்பு.. 'இன்னும் அவள நீ மறக்கலையா' கடுப்பான இரண்டாவது மனைவி..! போட்டு தள்ளிய கணவர்..! சசிகலாவின் தற்போதைய நிலை இதுதான்.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் நடித்தார்களா..? வைரலான புகைப்படம்.. ஆனால் உண்மை என்ன.. டிவிஎஸ் நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு.. ஜூபிடர் ஸ்கூட்டரின் தற்போதைய விலை எவ்வளவு.. கடைசி நேரத்தில் ட்ரம்ப் போட்ட 'அந்த முக்கியமான கையெழுத்து'..! போகும் போதும் ஷாக் கொடுத்த ட்ரம்ப்..! 3 இதயங்கள், 9 மூளைகளை கொண்ட தனித்துவமான உயிரினம்.. ஒருமுறை கடித்தாலே உயிர் போகும் ஆபத்து.. ரயிலுக்கு பின்னால் உள்ள ‘X’ என்ற அடையாளத்திற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? மின்னல் வேகத்தில் சென்ற UFO..! விமானத்தில் பறக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரல்..! பூமியில் இருந்து நிலவுக்கு பறந்த டைனோசர் எலும்புகள்..? 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு..

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி.. சென்னையிலும் புதிய உச்சம்..

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,000-ஐ கடந்துள்ளது.

corona test

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் கூட, இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் சராசரியாக 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக நேற்று மட்டும் 938 பேருக்கு தொற்று உறுதியானதால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,000-ஐ தாண்டியது.

இன்று புதிதாக 639 பேருக்கு கொரோனா

இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று \வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று மட்டும் புதிதாக 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 95 பேருக்கு இன்று தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 804 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், சென்னை பாதிப்பு எண்ணிக்கை 14,802-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 173-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 757 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,757ஆக் அதிகரித்துள்ளது. தற்போது 9,400பேர் மருத்துவமனையில் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

திருடு போன பைக் பார்சலில் வந்தது..

Sun May 31 , 2020
கோவை சூலூரில் இருச்சக்கர வாகனத்தை திருடிய இளைஞர் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வாகனத்தை அதன் உரிமையாளருக்கு பார்சலில் அனுப்பி வைத்து இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார், 34. இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சுரேஷ் தனது பைக்கை ஒர்க்‌ஷாப் முன்பு நிறுத்தி சென்றார். பின்னர் சிறிது நேரம் […]
Tamil News large 2549387

You May Like