‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

தமிழக சுகாதாரத்துறை செயலர் திடீர் மாற்றம்; இனி பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு இல்லை

தமிழக சுகாதாரத்துறை செயலர் திடீர் மாற்றம்; இனி பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு இல்லை

சென்னை :  தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி வந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு தற்போது மீண்டும் ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை தற்போது 38 ஆயிரத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சென்னை ,திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு நிலவிவருகிறது. இந்த இக்கட்டான கொரோனா காலக்கட்டத்தின் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தின் பாதிப்பின் எண்ணிக்கையை தெரிவித்து வந்தவர் தான் சுகாதாரத்துறை செயலாளரான பீலா ராஜேஷ்.

 இதற்கிடையில் தான் வருவாய் ஆணையராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் கொரோனா சிறப்பு  அதிகாரியாக பணியமர்த்தப்பட்டு அவர் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்.

தமிழக சுகாதாரத்துறை செயலர் திடீர் மாற்றம்; இனி பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு இல்லை

தற்போது சுகாதாரத்துறை செயலாளராக பணியில் இருந்த பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டு மீண்டும் ராதாகிருஷ்ணன் அப்பணியினை தொடங்குவதற்காக உத்தரவினை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் அப்பதவி வகிந்தார். குறிப்பாக தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற காலக்கட்டத்தில் திறமையாக செயல்பட்டவர் தான் டாக்டர் ராதாகிருஷ்ணன். மேலும் தமிழகத்தில் பல மருத்துவமனைகள் வருவதற்கும் உறுதுணையாக நின்றவர் என்பதால் கொரோனா தடுப்பு பணியில் இன்னமும் சிறப்பாக செயல்படுவார் என்பதற்காக சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சுகாதாரத்துறை செயலர் திடீர் மாற்றம்; இனி பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு இல்லை

மேலும் பீலா ராஜேஷ் வணிவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பீலாவைக் காண்பதற்கே தினமும் தொலைக்காட்சியில் 6 மணிக்கு செய்திகளை காண்பதை பலர் வழக்கமாக வைத்திருந்தனர். இதையும் தாண்டி சேலத்தில் சிறுமி ஒருவர் அவரை போல் உடை அணிந்து நடந்துகொண்டது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரியவருகிறது.

1newsnationuser2

Next Post

கொரோனா பாதிப்பில் ஸ்பெயின், பிரிட்டனை மிஞ்சிய இந்தியா.. தற்போது 4-வது இடம்.. ஒரே நாளில் 10,000-ஐ கடந்ததால் அதிர்ச்சி..

Fri Jun 12 , 2020
கொரோனா பாதிப்பில் ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, தற்போது உலகளவில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை சுமார் 4.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் மடும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா […]
உலகளவில்

You May Like