லேய்ஸ், குர்குரே போன்றவற்றை அடித்து வைக்கும் பிளாஸ்டிக் கவர்களை தாயரிக்கவும் விற்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ஊரடங்கு 5.O தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு தளர்வுகளை கொண்டுவந்துள்ளது. இருப்பினும் 50% சதவீத ஊழியர்கள், சமூக இடைவெளி, முகக்கவசம் என சில கட்டுப்பாட்டுகள் கடைபிடிக்க உத்தரவு கொடுக்கப்பட்டு அனைவராலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிளாஸ்டிக் விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு, கடைகளில் விற்கும் லேய்ஸ், குர்குரே போன்றவற்றை அடித்து வைக்கும் பிளாஸ்டிக் கவர்களை தாயரிக்கவும், விற்கவும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி முதலே இருந்த பிளாஸ்டிக் உபயோகத்தின் தடையை தொடர்ந்து கடைபிடிக்க இந்த அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.