ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதிகமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற இடங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. அதை கட்டுக்குள் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளொன்றுக்கு 13,000 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 4000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் தமிழகத்தில் தான் உள்ளது. ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் தமிழக அரசு இலவசமாக ரேஷன் கடைகளில் மாஸ்க் விநியோகிப்பது பற்றி ஆலோசித்து வருகிறது” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.