பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.. கால் வலி, தசை பிடிப்பு இன்னும் பல நோய்களுக்கு மருந்து இந்த தேநீர்..! செய்முறை உள்ளே.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

மீனவர்களுக்கு நற்செய்தி: குறைக்கப்பட்ட மீன்பிடி தடைக் காலம்

தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் ஜூன் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

fisherman boat

மீன் வளத்தைப் பெருக்குவதற்காக இந்திய கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், கொரானா முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 17 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

jayakumar 4

இதை தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசிடம் வலியுறுத்தின. இதையடுத்து மீன்பிடி தடை காலத்தை மாற்றி அமைத்து மத்திய நீர்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் ஜூன் 14-ஆம் தேதிக்கு பதில் மே 31-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஜூன் 15 ஆம் தேதிதான் தடைக்காலம் துவங்கும். ஜூலை 31ம் தேதி வரை தடைக்காலம் இருக்கும்.

மத்திய அரசின் மேற்கண்ட அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் ஜூன் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதே போல் தமிழகத்தின் மேற்கு கடற்கரையில் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் அவர் கூறினார்.

1newsnationuser4

Next Post

தோல்வியடைந்த ஊரடங்கு அடுத்த திட்டம் என்ன? - ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி

Tue May 26 , 2020
கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, தோல்வியை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கொரானா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ந் தேதி பிரதமே மோடி அறிவித்த ஊரடங்கு, தற்போது பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்டமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் தனது வீட்டில் இருந்தவாறு வீடியோ காண்பிரன்சிங் முறையில், ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து உரையாடி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசியவர், நோய்த்தொற்று ஆரம்ப கட்டத்தில் […]
ராகுல்

You May Like