கேரள உணவுகளில் "தேங்காய் எண்ணெய்" சேர்ப்பதன் இரகசியம் என்ன தெரியுமா..? இது தெரிஞ்சா நீங்களும் சேர்ப்பீங்க..! 9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு.. அரசின் வழிமுறைகள் என்னென்ன..? அதி தீவிரமாக பரவும் கொரோனா.. 5 நாட்களில் நவீன மருத்துவமனையை கட்டி முடித்த சீனா.. கமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி..? திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து..

ஜூலை 6 முதல் மாவட்டத்திற்குள் பணிக்கு இ-பாஸ் அவசியமில்லை – தமிழக அரசு

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஜூலை 6-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் பணிக்குச் செல்ல இ-பாஸ் அவசியமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த விவகாரம்; தலைமை செயலக ஊழியர் கைது

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் கடந்த 19ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஞாயிறு நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

மேற்காணும் பகுதிகளில் வரும் 6ம் தேதி முதல் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படவும் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பணியாளர்கள் மாவட்டங்கள் இடையே பணிக்குச் சென்று வர இ-பாஸ் அவசியம். மாவட்டத்திற்குள் பணிக்குச் சென்றுவர இ-பாஸ் அவசியமில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதிக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாவட்டங்கள் இடையே சென்று வருவதற்கான இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு புதிதாக இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்கள் பெற அவசியமில்லை. இதுவரை இ-பாஸ் / இதரபாஸ்கள் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பம் செய்து அதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

சாத்தான்குளம் கொலையில் கொரோனா தன்னார்வலர்களுக்கும் தொடர்பு..? 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை..

Sat Jul 4 , 2020
சாத்தான்குளம் கொலை தொடர்பாக கொரோனா தன்னார்வலர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ். ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த 5 பேரும் தற்போது […]
சாத்தான்குளம்

You May Like