மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வணிக வளாகங்கள் போன்றவை நாளை முதல் வழக்கம்போல் செயல்பட உள்ளதால், அவற்றிகான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,
கொரானா முன்னெச்சரிகையாக வணிக நிறுவனங்களுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்த வேண்டும். கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும். கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் அவர்கள் பணிக்கு வரக்கூடாது. வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியுடன் பொருட்கள் வாங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என தமிழக அரசு அறிவித்துள்ளது.