இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரானா பரவலை தடுக்கும் நோக்கில், ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வீரியமாகும் கொரொனா; பீலா ராஜேஷ் உட்பட 33 மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை மாதம் வரை உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 15 வரை பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்கு இடேயேயான பயணங்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளிப்பட்டுள்ள அறிக்கையில்,

பல்வேறு தினங்களில் மாண்புமிகு முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 22.6.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், 29.6.2020 அன்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கரோனா வைரஸ் தொற்றை
தடுப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, 31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும் முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான
பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர்
மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்,
திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர்
பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், 3 செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 19 முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 24 முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல் படுத்திய முழு ஊரடங்கு, கரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள்
கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் ஜூலை 5 வரை தொடரும்.

ஜூன் 19-க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே ஜூலை 6 அதிகாலை முதல் ஜூலை 31 நள்ளிரவு 12.00 மணி வரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர
சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம
ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள்,
கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி
நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான
தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்

1newsnationuser4

Next Post

சோனமுத்தா போச்சா.. டிக்டாக் மற்றும் ஷேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Mon Jun 29 , 2020
எல்லையில் அத்துமீறிய சீனாவுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் 59 சீன மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. மத்திய அரசும் சீனா உடனான பொருளாதார உறவை […]
tiktok.0

You May Like