‘BSc/BVSc’ பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு.! ரூ.20,000/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இளங்கலையில் பி.எஸ்சி பட்டப் படிப்பை (மைக்ரோ பயாலஜி பயோடெக்னாலஜி பயோ இன்பர்மேட்டிக்ஸ்) ஆகிய பாடப்பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும் அல்லது கால்நடை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு தற்காலிக பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.20,000/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் படிப்பு சான்றிதழ்களை 13.02.2024 தேதிக்குள் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், உடுமலைப்பேட்டை – 642205 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

தூள்...! ரேஷனில் கைவிரல் ரேகை பதிவு செய்ய வீட்டிற்கே சென்று புதுப்பித்திட நடவடிக்கை...! தமிழக அரசு அறிவிப்பு...!

Thu Feb 8 , 2024
கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது. தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47,407 பேர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தமுள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் […]

You May Like