தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்…!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கரையை நோக்கி நகரும். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்...!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

நவ.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.10ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்...!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

நவ.11ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, இராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்...!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

நவ.12ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்...!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை…!!

நவ.8, 9 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்...!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

நவ.10, 11, 12 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Chella

Next Post

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு : 6,503 பணியிடங்கள்…

Tue Nov 8 , 2022
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன்  கடைகளில் காலியாக உள்ள 6503 காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படும் என   கூட்டுறவுத்துறை ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்பட  துறைசார்ந்த அதிகாரிகள் பலர்  பங்கேற்றனர். […]

You May Like