
சென்னை : கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இந்தாண்டு முழுவதும் கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோானாவினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஒருபுறம் அரசு எடுத்துவந்தாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை உத்தரவு தொடரத்தான் செய்கிறது.

அந்த வரிசையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசனத்திற்கு தடை தொடர்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் கோவில்கள் மற்றும் புனரமைப்பு செய்யப்பட்டிருக்கும் கோவில்கள் என அனைத்திலும் கும்பாபிஷேக விழாக்கள் நடத்தகூடாது எனவும், கொரோனாவின் வீரியம் இன்னும் ஒராண்டிற்கு நீடிக்கும் என்பது அதுவரை கும்பாபிஷேக விழாக்கள் நடத்த இந்தாண்டு முழுவதும் தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.