தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம் என சிபிசிஐடி ஜஜி சங்கர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில், ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும், ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பினர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி அதிசய குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்த் சாத்தான்குளம் சம்பவத்தில், ‘பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பினருக்கு இருக்கும் தொடர்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் குறித்து விளக்கமளிக்க தமிழக உள்துறை செயளாலர் மற்றும் டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.